வா பகையே..
- மலையன்
நீண்டதும்
வளைந்ததும்
முப்பரிமாணம் கொண்டதுமான
கோடாரிகளோடு வந்தீர்கள்
பின்பு
தூக்குகயிறுகளை
மோதிரங்களாக நிரப்பிய
விரல்களோடு பணத்தட்டுகளை
ஏந்தி வந்தீர்கள்
அதன்பிறகு
நிணம்வளியும்
கூர்பற்களுடன் கூடிய
உங்கள் மூளைகளைத்
தூக்கிக்கொண்டு வந்தீர்கள்
இப்போது
என்ன கொண்டுவர
தேடிக்கொண்டேயிருக்கிறீர்கள்...
............................
22.07.2009
No comments:
Post a Comment