Thursday, July 23, 2009

நிறம் மாறும் இரவு..

நிறம் மாறும் இரவு..
- மலையன்

இரவை
இடித்துக் கொண்டிருந்தார்கள்

இடிந்து வீழ்ந்த அது
கழுத்தை இறுக்கி
நாக்கைத் தள்ளி
உயிர் உறிஞ்சும் கயிறுகள் உள்ள
மரக்காடானது

பின்பு வந்தவர்கள்
தீ மூட்டினார்கள்
கஞ்சி சுவையாயிருந்தது

கயிறுகளையும் காட்டையும்
எடுத்துக் கொண்டு
ஏந்துவதற்கு கைகளை
விட்டுச் சென்றார்கள்

இப்போது இரவு
சிவப்பாயிருந்தது...

----------------------
23.07.2009

No comments: