Sunday, September 6, 2009

நிஜங்களின் நிறங்கள்

நிஜங்களின் நிறங்கள்
சு.ஆன்றனி கிளாரட்

அண்மையில் நாகர்கோவில் நகரில் இயங்கும் ஒரு நூல் விற்பனை நிலையத்தில் சுமார் ஒன்றரைமணி நேரம் தேடி சில நல்ல நூல்கள் வாங்கினேன். அதில் ஒன்றுதான் திபெத்-சில புரிதல்கள். தி ஹிந்து நாளிதழின் தலைமை ஆசிரியர் என். ராம் அவர்கள் திபெத் பிரச்சனை குறித்து பிரண்ட்லைன் இதழில் (மே 23, 2008) எழுதிய கட்டுரை இக்குறுநூலில் தமிழில் தரப்பட்டுள்ளது. திபெத் பிரச்சனை குறித்து ஐந்து கேள்விகள் என்ற தலைப்பில் கொல்கத்தாவில் உள்ள சீன குடிமக்கள் நலன் காக்கும் அலுவலகத்தின் தலைமை அதிகாரியான மாவேசிவேய் எழுதியுள்ள கட்டுரையும் (04-06-2008) இணைக்கப்பட்டுள்ளது. தமிழாக்கம் செய்த இலக்குவன் அறிமுகமும் எழுதி திபெத்திய புத்த மதம் பற்றிய சிறு குறிப்பையும் எழுதியுள்ளார். வண்ண அ†டைப்படத்துடன் வாசிப்புக்கு உதவும் வகையில் எழிலுற வெளியிட்டது பாரதி புத்தகாலயம். 64 பக்கங்கள் கொண்ட இக்குறுநூலுக்கு 25 ரூபாய் சற்று அதிகமெனவே படுகிறது. சிந்தனைச் செறிவு கொண்ட இப்படைப்பை எளியநடையில் மொழிப்பெயர்ப்பு செய்த சி. இலக்குவன் பாராட்டப்பட வேண்டும்.
என். ராம் நேரடிக் கள ஆய்வுக்காக இரண்டு முறை திபெத் பயணம் மேற்கொண்டு, ஆதார பூர்வமான தரவுகள் சேகரித்து அதன் அடிப்படையில் இதை எழுதியிருப்பது மிகவும் பாராட்டப்பட வேண்டியது. ஆனால் அவரது பார்வையிலிருந்து வெகுவாக வேறுப†டு நிற்கின்ற காரணத்தால் பலமான எதிர்வினை இயல்பாகவே எழுந்தது. திபெத் பிரச்சனை குறித்த சரியான பார்வை (பக். 9) என்று இது அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் இது சீனம்சார் பார்வை என்பதே நமது கருத்து. அதனாலேயே வாதங்களில் வலு குறைந்திருக்கிறது என்பதும் சிந்தனையோட்டத்தில் கோர்வை கவிழ்ந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொதுவாகவே இந்துத்துவ எதிர்ப்பில் பதிவுகள் ஏற்படுத்தும் ராமின் இந்துக்குழுமம் மதச்சார்பின்மைக்கு நல்ல எடுத்துக்காட்டு என்றே நாம் கருதிவந்தோம். கந்தமால் வெறியாட்டங்களைக்கூட வெளிக்கொணர்ந்ததில் அது ஆற்றிய பணி வரலாற்று முக்கியத்துவம் கொண்டதாகும். ஆனால் நமது இந்தப்புரிதல் இலங்கைப் பிரச்சனையிலான இவர்கள் நிலைப்பாட்டில் உருக்குலைந்து போனது. சிங்கள அரசின் பௌத்த மதவாதத்தை வெளிப்படுத்த இந்த மதச்சார்பின்மைவாதிகள் தவிர்த்தது ஏன்? சிங்கள அரசப்பயங்கரவாதத்தின் ஊதுகுழலாக இந்த ஆங்கில ஊடக சாம்ராஜ்யம் ஒலித்தது ஏன்? ஒருமனதாக சட்டமன்ற தீர்மானம், அனைத்துக் கட்சித் தீர்மானம், என்று ஒட்டுமொத்த தமிழகமே ஒருமித்து ஈழந்தமிழர் இனப்படுகொலையை கண்டித்து போர்நிறுத்தம் கேட்டு கோந்தளித்த போதும் ராம்களும் ஆங்கில ஊடகங்களும் உலகுக்கு வேறுவிதமான திரிபுவகையறாகளை சுமந்து நின்றது ஏன்? இந்தக் கேள்விகளுக்கான விடை இலங்கை இந்தியா, சீனா, ஈழம், திபெத் என்று அனைத்து புள்ளிகளையும் ஒரே நேர்கோ†டில் கொண்டு நிறுத்துகிறது. அதுதான் ஓட்டுப்பொறுக்கி கம்யூனிஸ்†களின் நிலைப்பாடுகளை குருட்டாம்போக்காக ஆதரிப்பதுபோல் என்கிற என். ராமின் பார்வை. இந்த நூல் விமர்சனக் கட்டுரை அதை தோலுரிக்கும் முயற்சியே.
முதலாவதாக தலாய்லாமா அடையாளப்படுத்தும் திபெத்தின் விடுதலைக்கான போராட்டத்தை பழமைவாத நிலப்பிரபுத்துவக் கும்பலின் அரசுக்கு எதிராக கலகமாக விளக்குகிறது இந்நூல் (பக். 5) ஆக திபெத்திய மாணவர்கள், பெண்கள், முதியோர் என ஊடகங்களில் நாம் கண்ட அனைத்து திபெத் போராளிகளுமெ கலகக்காரர்கள் என்கிறது இந்தப்பார்வை. அரசப்பயங்கரவாதத்துக்கு அஞ்சியோடி இந்தியாவில் அடைக்கலம் புகுந்த அகதிகளை தப்பியோடிய கலகக்கும்பலாகச் சித்தரிக்கிறது இந்நூல். சொந்த மண்ணில் வாழும் ஆளும் உரிமையை கோரியதால் மேலாதிக்கச் சீனத்தால் ஓடஓட அடித்து விரட்டப்பட்ட திபெத்தியர்கள் கலகக்காரர்கள் என்கிறது இந்நூல்.
இமாச்சல் பிரதேசத்தில் அமைந்துள்ள தர்மசாலவில் வெளியிலிருந்து இயங்கும் திபெத் அரசாங்கம் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது இந்திய அரசுக்கு தெரியாமல் நடப்பதல்ல. இதை அரசு அனுமதிக்கிறதென்றால் இதையே அங்கீகாரமாக எடுத்துக்கொள்ள முடியாதா வெளிப்படையாக இந்திய அரசு இதை அறிவிக்காததற்கு அசுர பலம் வாய்ந்த சீனம் குறித்த அச்சம் அன்றி வேறென்ன காரணம் இருக்க முடியும் ஆனால் இந்தத் தொடை நடுக்கத்தையே இந்தியாவின் ஆக்கப்பூர்வமான நிலைப்பாடு என்று பாராட்டுகிறார் ராம்.
உலக நாடுகள் திபெத் மக்களின் தன்னாட்சிக்கான போராட்டத்தை ஆதரிப்பது மிகைப்படுத்தப்பட்ட கற்பனைகளின் அடிப்படையிலானது என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் ராம், சீனாவுக்கு எதிரான இந்த அணுகுமுறை அபாயகரமானது என்று மிர†டலும் விடுகிறார். போராடி விடுதலையடைந்த இந்திய நாடு ஏனைய விடுதலைப் போராட்டங்களை ஆதரிக்கும் என்ற நேரு போன்றோரின் நீதிசார்பார்வையே வங்கதேசம், பாலஸ்தீனம், ஈழம் போன்ற விடுதலைப் போராட்டங்களை தார்மீக ரீதியில் ஆதரித்ததன் காரணம். அத்துமீறும் சீனா மீதான அச்சம் காரணமாகவே இந்தியா இந்தக் கொள்கையிலிருந்து வழுக்கி ஆதிக்க வகை அரசுப் பயங்கரவாதத்தை கண்டுகொள்ளாமல் கள்ள மௌனம் சாதிப்பதை அறிவிக்கப்படாத வெளியுறவு தந்துவமாக ஆக்கியுள்ளது. ஈழம், பாலஸ்தீனம் போன்ற உரிமைப் போரா†டங்களில் இந்திய நிலைப்பாடு இப்படித்தான் அம்மணமாகி நிற்கிறது. இதையே ஆக்கப்பூர்வ நிலைப்பாடு என்கிறார் ராம்.
ஊடக ஒழுக்கம் குறித்து பேசும் ராமின் வாதங்கள் யாவும் நகைப்புக்குரியன. செய்தி ஆதாரங்களை சரிபார்த்தே செய்தி வெளியிடவேண்டும் என்கிறார் ராம். ஆனால் ஊடக சுதந்தரம் இல்லாத சூழல் நிலவும் போது செய்தி வெளியிடக்கூடாது என்கிறதுபோல் நீள்கிறது அவர் வாதம். ஆனால் ஊடக சுதந்திரம் தடைசெய்யப்படுவதன் ஒழுக்கம் இஸ்ரேல், இலங்கை, சீனா போன்ற பயங்கரவாத அரசுகளால் மீறப்படும் போது பொய்ப்பரப்பல் செய்யும் அரசுகளின் சங்கொலியாக ஒலிப்பதுதான் ஊடக தர்மமா? உதாரணமாக, உண்மை பேசினால் சிங்கள ஊடகவியலாரே ஒடுக்கப்படுவதும், உலக ஊடகங்கள் வெளியேற்றப்படுவது போன்ற சிங்கள பேரின வாதத் தலைவன் ராஜபக்ஷே துப்பும் எச்சிலை, தலைப்பு செய்தியாக தாங்குவது தான் ஊடக ஒழுக்கமா?
இலங்கை என்னும் சந்தையை இழக்க விரும்பாத இந்திய முதலாளித்துவக் கும்பல், இந்திய அதிகார வர்க்கத்துக்குப் போடும் பிச்சையிலிருந்து விழும் எச்சிலை நக்குவதுதான் ஊடக ஒழுக்கம்!
அரசப் பயங்கரவாதம் அச்சுறுத்தும் சக்தியாய் வடிவெடுத்து வரும் இக்காலக்கட்டத்தில், சிறிதளவேனும் அதை அச்சுறுத்துவது மனிதௌரிமை கோஷங்களே. ஹைத்தி, வல்வெட்டித்துறை, அசாம் போன்ற பகுதிகளில் காட்டுமிராண்டித்தனமான வல்லுறவுகளில் ஈடுபட்ட வெட்ககேடான இந்திய ராணுவத்தின் கொடூர முகத்தை உலக அரங்கிற்கு இனம் காட்டியது மனித உரிமை அமைப்புகளும், உயிரையும் துச்சமாக கருதி உண்மை ஒலிக்கும் ஊடகங்களுமே. இதற்கு அவை கொடுத்த விலை கொஞ்சநஞ்சமல்ல.
ஒழுக்கக்கேடு மலிந்ததும், வன்முறைத்தாக்குதல்களை தடுக்க வக்கற்றதுமான அரச வன்முறை சக்திகள் ராணுவமாக, காவல்துறையாக, சல்வாஜீடும் போன்ற கூலிப்படைகளாக கொலைத்தாண்டவமாடுகின்றன. மூக்கில் விரலைவிட்டு ஆட்டியும் மூன்று நாட்களாக உள்ளே நுழையமுடியாத இந்த காகிதப்புலிகளுக்கு (மும்பைத்தாக்குதல்) கதாநாயகத் தகுதிகொடுத்து கௌரவித்த ராம் வகை ஊடகயியலார் மனித உரிமை முழக்கங்களை கொச்சைப்படுத்துவது புரிந்து கொள்ள இயலாததல்ல.
பன்னாட்டு விளையாட்டுப்போட்டிகள் அரசியல் தன்மை கொண்டவை. அவை வெற்று விளையா†டுகளல்ல. இதுபோன்ற போ†டிகள் நடக்கும் நாடுகள் சட்டம்-ஒழுங்கு தரச்சான்றிதழை உலக அரங்கில் திருடிக் கொள்கின்றன, இப்படியொரு தோற்றத்தை ஏற்படுத்தவே அண்மையில் இதுபோன்ற இனப்படுகொலை நடக்கும் இலங்கை மண்ணில் கிரிக்கெட் போட்டி ஒன்று நடத்தி அந்த இரத்தவாடையடிக்கும் சிங்கள அதிகார வர்க்கத்துக்கு உலக அளவில் நன்னடத்தை சான்றிதழ் பெற்றுத்தர இந்திய-இலங்கை கள்ளத்தொடர்பு முயற்சித்தது. இந்த அரசியல் தொடர்பு விளையாட்டு போட்டிக்கு இருப்பதால்தான் இலங்கை - பாக்கிஸ்தான் கிரிக்கேட் போட்டியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி பாக்கிஸ்தானில் நிலவும் நிச்சயமற்ற தன்மையை தோலுரித்தனர்.
இதே அடிப்படையில்தான் திபெத் விடுதலைப் போரா†டத்தை ஒடுக்கும் சீன மண்ணில் ஒலிம்பிக் போட்டிகள் நடப்பது அவ்வரசுக்கு இல்லாத யோக்கியத்தை பெற்றுத் தருவதாக அமையும். மேலும் திபெத்தின் நியாயங்களை சீனாமீது உலகப்பார்வை குவியும் இத்தருணத்தைப் பயன்படுத்தி வாதப்பொருளாக்க முடியும் என்ற உத்தி முன்னெடுக்கப்பட்டது.
இவ்வளவுப் பின்னணிகளைக் கொண்ட இந்த சமகால எழுச்சியை சீன ஒலிம்பிக்கை சீர்குலைக்கும் முயற்சி என்று விவரிக்கிறது ராமின் பார்வை.
பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒப்பீட்டாய்வுகளை செய்கிறார் ராம். புத்த மடங்களைச் சார்ந்தவர்களே கலவரங்களில் ஈடுபட்டார்கள் (இலங்கையில் ஊரறிய நடக்கும் புத்த பிட்சுகளின் வன்முறை வெறியாட்டங்கள், பேரினவாத அழுத்தங்கள் குறித்து ராம் வாய்திறக்கமாட்டார் என்பது வேறு விசயம்) என்று சொல்லி புத்தமடாலயங்களில் அத்துமீறி சீன மேலாதிக்க குழு நுழைந்ததை பர்வேஷ்முஷாரப் எடுத்த நடவடிக்கைக்கு ஒப்பிடுகிறார் ராம். இதில் முஷாரப்பை பாராட்டிய மேற்கத்திய ஊடகங்கள் சீனாவை பாரா†டவில்லை என்று ஆதங்கம் வேறு.
முதலாவது, திபெத்தில் நடப்பது பாகிஸ்தானைப் போலல்லாது ஒரு இனமக்கள் வேற்றினமக்களிடமிருந்து விடுதலை கோரும் போரா†டம் என்பதை மறந்து ஒப்பீடு செய்கிறார் ராம். இதையே காலிஸ்தான் கோரிய சீக்கிய மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க இந்திரா எழுப்பிய பொற்கோவில் நுழைவு நடவடிக்கைக்கு ஒப்பிட ராம் தயாரா? இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாகத்தான் பியாந்த்சிங் என்ற சீக்கியரால் இந்திரா கொலைச்செய்யப்பட்டார் என்பதை மறக்க முடியுமா? இந்திராவின் நினைவுநாளில் ராமோ, ஏன் இந்திய ஆ†சியாளர்களோ, காங்கிரஸ் கட்சியினரோ அதை நினைவு கூர்ந்து இந்திராவின் குருத்வாரா நுழைவை நியாயப்படுத்தியோ, அதற்குப் பழிவாங்கிய சீக்கிய சமூகத்தை கண்டித்தோ பேசத் திராணி உண்டா? தொடர்ந்து வந்த தேர்தலில் இந்திரா மீதான பழிவாங்குதலை அங்கிகரீத்துதானே சீக்கிய மக்கள் அதே பியாந்த் சிங்கின் மனைவி விமலாகஷர் என்பவரை எப்போதுமில்லா வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து தாயை இழந்த தனயன் ராஜீவ் பிரதமராக அமர்ந்த பாராளுமன்றத்தில் உறுப்பினராக அனுப்பினார்கள் அது குறித்து பேச துணிவு இருக்கிறதா இல்லை, இந்திரா கொலைக்காக காங்கிரஸ் திட்டமிட்டு சீக்கிய மக்களை தலைநகர் தில்லியிலேயே நரவே†டையாடியதை குறித்து பேச தைரியம் இருக்கிறதா? இது எல்லாவற்றையும் மறந்து இன்று சீக்கியரான மன்மோகன்சிங்கை பிரதமராக்கிய சோனியா கணவரைக் கொன்றதாக விடுதலைபுலிகளைக் கருதி ராஜபக்ஷேயுடன் கூட்டணியமைத்து மக்களுக்கு அறிவிக்காமலே ஈழமண்ணில் யுத்தம் செய்கிறாரே அதுபற்றி ராம் பேசுவாரா?
அரசியல் கூர்மதியோ, இந்தியாவின் பிராந்திய நலன்கள் குறித்த அறிவோ ஈழப்போராட்டம் மற்றும் விடுதலைபுலிகள் போராட்டத்தின் ஆன்மா குறித்த புரிதலோ இல்லாமல் அமைதிப்படையை அனுப்பி தமிழர்கள் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கினார் ராஜீவ். தமிழச்சிகளை வல்லுறவு செய்து வக்கிரம் தீர்த்தது அமைதிப்படை கமிஷன் இது பழிவாங்கும் நடவடிக்கை, இதை பயங்கரவாத நடவடிக்கை என்று கருத இயலாது என்று சொன்ன பின்னரும் புலிகளை பயங்கரவாதிகளாகச் சித்தரிக்க ராமின் இந்துக் குழுமம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு காரணம் என்ன? வெறும் வன்முறை எதிர்ப்பா. அப்படியானால் பகத்சிங், ராஜதுரை, குருதேவ் அகியோரைப் பயங்கரவாதிகள் என்று சொல்லி ஆங்கிலேய ஆட்சி, தண்டித்தது. அதையே ராமின் கருத்தாகக் கொள்ளலமா சேகுவேரா, பிடல், மாவோ, அராபத் ஆகியோரையும் இந்தப் பயங்கரவாதிகள் ப†டியலில் சேர்த்துக் கொள்ளலாமா!
இல்லையென்றால் ஏன் இந்த இரட்டைவேடம் ராஜீவ் கொலையாளிகள் என்று பிரபாகரனையும், தமிழீழ விடுதலைப்புலிகளையும் திரும்ப திரும்ப அழைப்பதன் மூலம், இது தொடர்பாக விசாரிக்கப்பட்ட சுப்பிரமணியசாமி, அவருக்கும் சந்திராசாமிக்கும் உள்ள நெருக்கல் குறித்த கவனத்தை சிதைக்க முயற்சிக்கிறாரா ராம். இவ்விசாரணையில் ஒத்துழைப்பு தரவில்லை என்று ராமின் விசாரணை கமிஷன் குற்றம் சா†டுவதை இங்கே நினைவு கூரவேண்டும்.
ஆக, இந்திரா கொலை தொடர்பாக சீக்கியர் மீது ஓர் அணுகுமுறை, இன்னும் சொல்லப்போனால் காந்நியைக் கொன்ற இந்துத்துவக் கும்பல்மீது ஓர் அணுகுமுறை, ஆனால் ராஜீவ் கொலை தொடர்பாக தமிழர் மீது வேறு அணுகுமுறை என்பதன் அர்த்தமென்ன ஆரிய, பார்ப்பன, வட இந்திய சார்புபோக்குதானே. சுப்பிரமணியசாமியை காப்பாற்ற ராம் புலிஎதிர்ப்பு கோசத்தை தொடர்கிறார். நீதிமன்றத்தில் வன்முறையைத் தூண்டிய சுப்பிரமணியசாமிக்கு உதவியாக சோ கொந்தளிக்கிறார். இதில் எல்லாமே பூணூல் உறவுதானே, ராம் அவ்வப்போது சிவப்பை அள்ளி காவிக்கு மேலாக தடவிக் கொள்கிறார் அவ்வளவுதான்.
திபெத் தொடர்பான சீனாவின் அரசியல் தீர்வுகளை அடியொற்றி வக்காலத்து வாங்குகிறார் ராம். ஆனால் மக்களாட்சி தத்துவமே, தங்களின் வாழ்வு குறித்து தாங்களே முடிவெடுக்கும் அதிகாரம் மக்கள் கையில் இருப்பதுதானே. ஆக பிரிந்து போகும் உரிமை உள்ளிட்ட சுயநிர்ணய உரிமையை திபெத் மக்கள் பெற்றாக வேண்டும். இதில் பாலஸ்தீனம், ஈழம், திபெத் போன்ற அனைத்து சிக்கல்களிலும் இதுவே ஆரோக்கியமான, நியாயமான அணுகுமுறையாக இருக்க முடியும். அதைவிடுத்து திணிப்புகளை நியாயப்படுத்துவது சிந்நனையாளர்களுக்கு அழகல்ல.
திபெத் பகுதி சீன ஆட்சிகளில் பொருளாதார வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதற்கு புள்ளி விவரத் தரவுகளோடு, தானே கடுமையாக உழைத்து சேகரித்த ஆதாரங்களை முன்வைத்து வாதங்களைத் தருகிறார் ராம். வறட்டு வர்க்கத் தர்க்கத்தின் உச்சநிலை இதுவே எனலாம். பொருளாதாரக் காரணங்களுக்கு அப்பாலும் அரசியல், பண்பாட்டு, வரலாற்றுக் காரணங்களே விடுதலைப் போராட்டங்களுக்கு வித்தி†டிருக்கின்றன. செர்பியாவிலிருந்து கொசாவோ, இந்தியாவிலிருந்து பாக்கிஸ்தான், பாகிஸ்தானிலிருந்து வங்க தேசம், ரஷ்ய கூட்டமைப்பின் சிதறல்களை என்று எத்தனையோ எடுத்துக்காட்டுகள். இங்கிலாந்து ஆதிக்கத்தில் இந்தியாகூட இன்று பாரிய பொருளாதார வளர்ச்சிகண்டிருக்க கூடும். ராம் அதைத்தான் விரும்புகிறாரா சமகால இனவெழுச்சி விடுதலைப் போராட்டங்களின் வரிசையில் பாலஸ்தீனம், ஈழம் போன்றவற்றோடு திபெத் நேர்கோட்டில் நிற்கிறது. இதை பொருளாதார வளர்ச்சி என்ற பொய் மூட்டையில் திணிக்க நிறையவே மெனக்கெடுக்கிறார் ராம்.
திபெத்தின் கல்வி வளர்ச்சிப் பற்றி பேசும் ராம் திடுக்கிடும் தகவல் ஒன்றை முன்வைக்கிறார். அதாவது, திபெத் பகுதிக்கு 2000 சீன ஆசிரியர்களையும் கல்வி அதிகாரிகளையும் அனுப்பி வைத்து கல்வி வளர்க்கிறதாம் சீனம். இது எத்தகைய ஒரு வல்லாதிக்கம் என்பதை உலகறியும். திபெத்திய இன ஓர்மையை, விடுதலை வேட்கையை முளையிலேயே கிள்ளியெறியும் சூழ்ச்சியல்லவா இது ஈழப்பகுதியின் கல்வி வளர்ச்சிக்கு சிங்கள ஆசிரியர்களைக் கல்வி அதிகாரிகளாக அனுப்பி வைப்பது என்ன கொடுமையாக அமையும், இந்த பண்பாட்டு வன்முறையை இந்தியாவுக்கு முன்மொழிகிறார் ராம். பன்மைத்தன்மையை தக்கவைக்க எல்லா மாநிலங்களிலும் தொடரும் போராட்டம் ஒருபுறம், இந்து, இந்தி, இந்தியா என்ற ஒற்றை அடையாளத்தை திணிக்க நடக்கும் முயற்சிகள் மறுபுறம் என இந்தியா தடுமாறிக்கொண்டிருக்கும் சூழலில் இதுபோன்ற முயற்சிகள் எத்தகு விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை எண்ணிப்பார்த்திட வேண்டும்.
திபெத், ஈழம் போன்ற பகுதிகள் கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற தன்னாட்சி பெறுதலே அடிப்படையாகும். ஓர் இனக்குழு தனது அடையாம் குலையாமல் உள்ளார்ந்த பொருத்தக்கூறுகளோடு வளர்நிலை திட்டமாதலே விஞ்ஞானப்பூர்வமானதாகும். இந்த உண்மைகளை ஏனோ மறந்துவிடுகிறார் ராம்.
தனது வாதங்கள் வலுவானதாக இல்லை என்பதாலோ என்னவோ தலாய்லாமா என்ற தனிமனிதரை ஆளுமைக்கொலை செய்ய எத்தனிக்கிறார் ராம். தனது மக்களின் விடுதலை போரா†டத்துக்கு ஆதரவு கோரி உலக நாடுகளிடையே அவர் மேற்கொள்ளும் முயற்சியை வெறும் சீன எதிர்ப்பு அல்லது அதன் சித்தாந்த எதிர்ப்பு என்று குறுக்கிட முனைகிறார் ராம். தலாய்லாமவின் சொத்துபற்றி எல்லாம் வாதிட அவர் முயல்வது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.
உண்மையில் 14-வது தலாய்லாமா ஒரு முழுமையான அரசியல்வாதி அகண்ட திபெத்துக்கான இயக்கத்தை தலைமை ஏற்று நடத்துபவர். அதனை சீனாவிலிருந்து பிரிக்க முயன்று வருபவர். வெளிநாடுகளுடன் தொடர்புடைய ஒரு கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர் நா†டுப் பிரிவினை கோரும் அரசியல்வாதி (ப. 44) என்ற வகையில் நீள்கிறது ராமின் விளக்கம். இந்த அளவுக்கு வெறுப்பைக் கொட்ட வேண்டிய அவசியம் என்ன! ஓர் ஆன்மீகவாதி தான் சார்ந்த மக்கள்கூட்டத்தின் விடுதலை வேட்கையில் அக்கறை காட்டுவது எப்படி தவறாகும்? இதனை ஒரு கருத்தியல் எதிர்ப்பாக, பிரிவினைவாதமாக சித்தரிப்பதன் தேவை என்ன? இங்குதான் ஓர் கருத்தில் நாம் உடன்படுகிறோம் அதாவது, திபெத்தியர் போராட்டத்தினால் உலக அரங்கில் சீன, கம்யூனிஸ்ட் அரசுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த பக்கவிளைவையே போராட்ட நோக்கமாக காட்ட விழைவது தனது கம்யூனிஸ்ட், சீன சார்பை கா†ட ராம் அவர்களுக்கு உதவுமேயன்றி உண்மைக்கான ஊடகவியலாளராக அவரை அடையாளம் காட்டவில்லை.
“தனக்கே உரித்தான வளமான பண்பாட்டையும் ஆன்மீக, நாகரீகம், மொழி மற்றும் தனி அடையாளத்தையும் கொண்ட புராதன தேசமாகிய திபெத்தின் மக்கள் பூமிப் பரப்பிலிருந்தே வேகமாக மறைந்து வருகின்றனர்” என்ற தாய்லாமாவின் உள்ளார்ந்த வேதனையை புத்தி பேதலித்த பிதற்றல் என்ற கடுஞ்சொற்களால் மேலும் காயப்படுத்துகிறார் ராம்.
ஆக ராம் நிறுவ விழைவது என்ன என்று சுருங்கப் பார்த்தால், தலாய்லாமா தலைமையிலான திபெத்தியர்களின் விடுதலைப் போரா†டமென்பது, அமெரிக்க, மேற்கத்திய இடதுசாரி எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஓர் அங்கம் மட்டும் என்று நிறுவுவதேயாகும். தலாய்லாமாவின் சொத்து விபரம் பற்றி பேசுவதும், அட்டையில் புஷ்-லாமா படத்தை அச்சி†டிருப்பதும் மேற்கத்திய, அமெரிக்க முதலாளித்துவ கைக்கூலியாக அவரை காட்ட விழையும் முயற்சியாகும்.
மேற்கத்திய, அமெரிக்க, முதலாளித்துவ போக்குகள் நமக்கு உடன்பாடானவையல்ல. அவற்றை நாம் நிராகரிக்கவே செய்கிறொம். ஆனால் போலி ஓட்டுப்பொறுக்கி கம்யூனிஸ்ட் அரசுகள் முதலாளித்துவத்தோடு தந்திரமான சமரசங்களை செய்து கொண்டுள்ளது கண்கூடு. மேற்குவங்க கம்யூனிஸ்ட் அரசு டாட்டா நிறுவனத்தோடு போட்ட உடன்பாட்டை உண்மையான இடதுசாரி சிந்தனையோட்டத்தில் நினைத்துப் பார்க்கவேனும் இயலுமா?
மதச்சார்பின்மையை நாம் உயிராய் மதிக்கிறோம். இந்துத்துவ கருத்தியல் இந்திய நிலப்பரப்பில் ஏற்படுத்தும் காயங்களுக்கு எதிராக நமது குரலும் இணைந்தே ஒலிக்கும். ஆனால் போலிமதச்சார்பின்மை சிங்களத்தின் பௌத்த மதவாத அரசை ஆதரிக்கும் போக்கு அதன் நிஜ முகத்தை வெளிப்படுத்தி விடுகிறது. விடுதலை வேண்டும் குழுவை கொச்சைப்படுத்த அதன் தலைமை ஆன்மீகவாதியாக இருப்பதை பயன்படுத்துவது என்பதில் நாம் மாறுபடுகிறோம். எல்லா அறிவுஜீவி முகமூடிகளும் கிழிந்து பூணூல் சாதிவெறியர் கூட்டணி அப்பட்டமாக வெளிச்சமாகும் போது பார்ப்பனிய எதிர்ப்பில், சாதிய ஒழிப்பில் இன்னும் காத்திரமான வெற்றிகள் கிடைக்கும் என்பதே நமது நம்பிக்கை.

No comments: