முகம்
- மலையன்
கண்ணாடியில் மோதி
தெறிக்கும்
பிம்பத்தின் முகத்தைப்
பார்க்கும்போது என்னால்
நம்பமுடியவில்லை
அது என்முகம்தான் என்பதை..!
இரத்தம் சூடேறி
நாளங்களைப் அசைத்துப் பார்ப்பது
அனிச்சையாக நடந்துவிடுகிறது
காக்காவலிப்பு வந்தவனைப்போல
கைவிரல்களை இறுக்கப்
பிடித்துக் கொள்கிறேன்
ஆயினும்
நான் உடைத்தக்
கண்ணாடிச் சில்லுகளைப் பொறுக்கி
கட்டி எழுப்பிய மண்டபத்தின்
தரைகளில் மார்பிள் கல்பதித்து
வழுவழுப்பை ஏற்படுத்தியிருந்தார்கள்
பயம்
ஒரு காட்டுத்தீ மலரைப்போல்
பற்றி எரிந்து கொண்டிருக்கிறது
என்னுள்..
வாய் நிறைய பெட்ரோலை
நிரப்பிக் கொண்டு
தேடி அலைந்து கொண்டிருக்கிறேன்
முகம் பற்றிய என் குறியீட்டை
துப்பி எரித்துவிடுவதற்காக
-----
31.08.2009
No comments:
Post a Comment