Wednesday, September 2, 2009

வந்து கொண்டிருக்கிறேன்..

வந்து கொண்டிருக்கிறேன்..
- மலையன்

தொலைதூர பயணங்களை
நடந்தே கடக்கிறேன்
வண்டிகளுக்கு உள்ளே...

காற்றடித்து பறக்கும்
தலைமுடிகளுக்கு முன்னால்
ஆர்வத்தோடு பயணிக்கிறேன்..

தவறி வரும் அழைப்பில்
தொலைபேசியின்
வாய் அருகே ஒரு காவல் நாயின்
காதுகளைப்போன்று
விடைத்து நிற்கின்றன என் காதுகளும்..

இரைச்சல்களும் புழுதிகளும்
எதுவும் செய்யமுடியாத் தருணத்தில்

சந்தணமும் பனித்துளியும்
வந்து கதவு தட்டுகையில்
என்னிடம் பூட்டுகளும் இல்லை
நிலைக் கொண்டிகளும் இல்லை..

இரக்கமற்ற காற்று கொண்டுவரும்
குரலோ சிரிப்போ
என்னை பட்டினிப் போட்டு விடுகிறது..

பசித்து பசித்து
பழகிக் கொண்டதால்
நடந்து கொண்டிருக்கிறது உடல்

கனவுகள் கூட
பற்றவைத்த ஒளி கொண்டு
உன்னை தேடி அலைவதால்

தவளைகள் கத்தும் இரவையும்
தாண்டி காத்திரு

நான்
வந்திருப்பேன்..

----
31.08.2009

No comments: