அது திமிங்கிலம் அல்ல
இரா. அரிகரசுதன்
கடலை உறிஞ்சி துப்பியும்
சுழற்றி அடித்தும்
திரிந்து கொண்டிருந்தது
அந்த நீலத்திமிங்கிலம்
இரை தின்னாமல்
நீந்திக் கொண்டேயிருந்ததில்
தெவங்கிப் போனது கடல்
உயிர்க் கொத்தித் தின்னும்
அந்த தேவதைப் பறவையின்
சிறகின் சத்தம்
மழைச்சாரல் என
இறங்கி வீழும்போது
காற்றைச் சிறையிட்டுத்
திரியும் அந்த
முரட்டு திமிங்கலம்
சின்னத் தூண்டிலில் சிக்கிவிடும்
அப்போது
உயிர் துப்பி சிரிக்கும் அந்த
திமிங்கிலத்தின் கண்
கொழுத்திப்போடும் வெளிச்சத்தில்
ஒழுகும் இதயத்தை
ஏந்தி பிடித்தபடி
பைத்தியம் பிடித்து
ஓடிக்கொண்டிருக்கும்
நம் நட்பு
------
16.02.2010
No comments:
Post a Comment