மன்மோகன்சிங்கும் மண்ணெண்ணெயும்
- இரா.அரிகரசுதன்
- இரா.அரிகரசுதன்
நாங்கள் மண்ணெண்ணெயின் விலையை ஏற்றவில்லை எனவே பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் ஏழைகளை பாதிக்காது என்று மேதகு பாரத பிரதமரும் பொருளாதார நிபுணருமான டாக்டர். மன்மோகன் சிங் அவர்கள் கூறியிருக்கிறார்.
பேருந்துகள் என்ன மண்ணெண்ணெயிலா ஓடுகின்றன? அல்லது லாரி, ஆட்டோ, பைக்குகள்தான் மண்ணெண்ணெயில் ஓடுகின்றனவா?
விளைபொருள்களை விவசாயிகள் சந்தைகளுக்கு தலைச்சுமட்டிலேயே கொண்டு சென்று விடுவார்களா..? அல்லது பொருள்கள் தானாகவே சந்தைக்கு சென்றுவிடுமா...? அப்படி ஏதாவது அதிசயம் நடக்குமேயானால் நடுவண் அரசு சொல்வதை நாம் கைகட்டி, வாய் பொத்தி கேட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் என்ன செய்வது அந்த மாயாஜாலங்கள் நடக்காதே! அப்படியானால் ஏழைகள் இந்த விலைஏற்றத்தால் எப்படி பாதிக்கப் படாமல் இருப்பார்கள்?

2002 இலிருந்தே மண்ணெண்ணெயின் விலை அதிகரிக்காமல் ஒரே விலையிலேயே இருந்து வந்திருக்கின்றது. அப்படியானால் 2002 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை நமது இந்திய திருநாட்டில் எந்த ஏழையும் பாதிப்பிற்குள்ளாகவில்லையா? கடன்தொல்லையால் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் அதிகரிக்கவில்லையா? அல்லது வறுமைக்கோட்டிற்கு கீழ் இருந்த மக்களின் வாழ்வில் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டு அனைவரும் வறுமைக்கோட்டிற்கு மேல் சென்று விட்டார்களா?
"சர்வதேச எண்ணெய் சந்தையில் ஏற்பட்ட விலை ஏற்றத்தின் காரணமாகவே இந்த விலைஏற்றம்" என்று நடுவண் அரசு கூறிவருகிறது. இந்த விலை ஏற்றத்தின் மூலமாய் மட்டும் 6,400 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் வரப் போகிறது. ஏற்கனவே 35,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் உள்ள பெட்ரோலியத் துறையால் இந்த விலை ஏற்றத்தை நிச்சயமாக தவிர்த்திருக்க முடியும். பெட்ரோலியப் பொருள்கள் மீதான வரிவிதிப்புகளில் மாற்றம் செய்வதன் மூலமாக கூட இந்த விலை ஏற்றத்தை தவிர்த்திருக்கலாம்.
இந்த விலைஏற்றத்தின் காரணமாக ஏற்படக்கூடிய போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலைஏற்றம் மக்களிடமிருந்து மறைமுகமாக அரசுக்கு ஏற்படுத்தி தரக்கூடிய வருமானம் எத்தனை கோடிகளோ..?
கடந்த சில மாதங்களாக பெ†ரோலியப் பொருள்கள் விலை ஏற்றப்படும் என்ற நிலை இழுபறியில் இருந்து கொண்டே இருந்தது. கூட்டணிக் கட்சிகள், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் பிற எதிர் கட்சிகளின் நெருக்கடிகளின் காரணமாக இது வரை தள்ளிப் போடப்ப†ட இந்த விலை ஏற்றம் தற்போது (பிப்ரவரி 15, 2008) அமுலுக்கு வந்துள்ளது.

வரக்கூடிய பட்ஜெட்டில் அதைக் குறைக்கப்போகிறோம் இதைக் குறைக்கப்போகிறோம் என்றெல்லாம் கூறிக்கொண்டு இப்போது இப்படி மறைமுகமாக விலை ஏற்றங்களைச் செய்வது மோசடித்தனமாக தெரியவில்லையா?
ஏழைகள் பாதிக்கப்படமாட்டார்கள் என்று இதற்கு இப்படி ஒரு விளக்கம் தேவையா...?
25.02.2008
25.02.2008
No comments:
Post a Comment