
பாம்புகள் அழகானவை
படமெடுத்து ஆடும்போது...
நிலாவை விழுங்குமாம்
கிரகணத்தின் போது...
பாம்பு வசிக்கும் இடம்
ஒரு கிழங்கு மணம் வீசும்.
பாம்பு படைகளை நடுக்கும்
உயிர்களை எடுக்கும்.
கல்லறைகளின் அடியில்
படுத்துக் கிடக்கும்.
தின்ற
ஈராக்கிய உடல்கள் சீரணிக்கவில்லையாம்
ஈரானின் தெருக்களில் கிடந்து புரண்டால்தான்
சீரணம் ஆகுமாம்...
......
மார்ச் 2008
No comments:
Post a Comment