Monday, July 27, 2009

தின்று பழகவேண்டும் தனிமையை


பொட்டித் தெறிக்கும்
தனிமையின் சூட்டில்
கால் ஒடிந்து கிடக்கிறது
ஒருபறவை சிறகோடு

நினைவுகளின்
கலங்கியத் தேக்கத்தில்
வறண்டு கிடக்கும்
நாக்கை நனைத்துக் கொண்டு
பெருமூச்சு விடுகையில்

இதயத்தின் மெல்லிய
நரம்புகள் அறுந்து
தெறிக்கின்றன

விரல் நுனியில்
கனன்று கிடக்கும்
கவிதையின் சூடு

எடுத்துவரும்
அணையா நெருப்புக் கங்கின்
சூட்டில்

உருகி இணைகின்றன
நரம்புகள்..

இலக்கு தகர்க்கும்
அம்பு இயக்கி
வில்லின் நாதம்
அதிர்ந்து எழுகிறது..
எழுகவே....!

......
மே,2008

No comments: