காதல் செய்வோம்...
-- மலையன்
நீ
என் குரல்
என்னைக் காதலித்தாய்
உன் ஆன்மா
பரிசுத்தமானது
இளம்பிள்ளைவாதத்தால்
இறந்துபோன
என் கால்களை
நீ
காதலுடன் தடவினாய்
என் கண்ணில் வழிந்து
கன்னத்தை நனைத்து
விம்மி மேலெழுந்த
மார்பில் வீழ்ந்து
சிலிர்த்தது காதல்
என் அறுபட்டிருந்த
தொப்புள்கொடி
மீண்டும் துளிர்த்தது
வெறுமைகளால் போர்த்தப்ப†டிருந்த
என் தோட்டம்
தேன் சிந்தும் பூக்களால்
நிரம்பி வழிந்தது
உள்ளத்தின் சிகரம் காதல்
உயிர் கொடுக்கும்
மந்திரத் தொடுதல்
காதல்...
..........
நவம்பர் 2008
No comments:
Post a Comment