காலம்
- என். டி. ராஜ்குமார்
அந்த ஊரில் இரண்டு தெருக்களிருந்தது
மேலத் தெருக்காரர்கள் கீழத்தெருக்காரர்களை
விளையாட்டுக்காக
கோபமாக
பயங்கரவாதியாக
மாறி மாறி
சும்மா அடித்துக்களித்தார்கள்
அதில் ஒருவர் இறந்துவிட்டார்
உடனே கீழத்தெருக்காரர்கள்
கிளர்ச்சியாளர்களை அழைந்துவந்து
அத்துமீறிச் சென்றார்கள்
காவல்துறையினர்கள் அவசர அவசரமாக
கீழத்தெருவில் வந்து
கையில் கிடைத்தவர்களை கைதுசெய்துசென்றார்கள்
தானைத்தலைவர்களோ
இறந்தவர் வீட்டிற்கு தனதுநிதியிலிருந்து
இழப்புத்தொகையாக
ரூபாய் பத்தாயிரம் கொடுத்துவிட்டு
தீவிரவாதத்தை
இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டுமென்றார்..
-------------------
No comments:
Post a Comment