வெண்ணிலவுக்கு அடியில்..
- மலையன்
“தயவு பார்க்காதே
வெறிகொண்டு இறுக்கி அணை
எலும்புகள் முறிந்தாலும்
கிளர்ச்சி வெடித்து பிறக்கட்டும்
கண்ணிமையால்
என் இமை நீவு
கண்ணுக்குள் கிடக்கும் உனக்கு
தென்றல் கிடைக்கட்டும்
மென்மையிலும் மென்மையான,
வலிய, கூர்மையான
வேர்நுனி நெஞ்சு கொண்டு
என் நெஞ்சு முட்டு
என்முதுகு
வீங்கி புடைக்கட்டும்
கையால் தடவு
காமம் கொல்லட்டும்
இணை.. பரவு.. வெல்..
என்னை
என்னிலிருந்து விடுதலைசெய்
வெண்ணிலா நாணத்தில்
சிவந்து வெடிக்கட்டும்
இரக்கம் காட்டாதே”,
என் மகளிடம் மருமகன்
கவிதை சொல்வான்
காதல் செய்வான்
நான் இழந்த
என் தாய்மண்ணின்
குளிர்ந்த மடியில்
வெண்ணிலவுக்கு அடியில்...
-------------
27.09.2009
No comments:
Post a Comment