Monday, August 24, 2009

வெளி

வெளி
- என். டி. ராஜ்குமார்

மனப்பாடப் பகுதியை ஒப்பிக்காததால்
வாத்திச்சி என்னை ‘வெளியேபோலே’ என்றாள்

எதிர்த்துப் பேசியதால் அப்பன் என்னை
வெளியில் சென்று படுத்துக்கொள் என்றார்

வீட்டுவேலை செய்யாததால் அண்ணன் என்னை
வெளியிலே விரட்டிவிட்டான்

சொன்னபேச்சைக் கேட்காததால் அடிக்கவிரட்டிய
அம்மா என்னை வீ†டிற்குள் வந்துவிடாதேஎன்றாள்

இப்போது எனக்கு வெளியில் படுத்தால்தான்
உறக்கமே வருகிறது..

------

1 comment:

Raji said...

ver nice ...i liked it a lot !