ஒளியின் நீளம் நிலவுக்கு தெரியாது
இரா. அரிகரசுதன்
ரோசா நிற செம்பருத்தியாய்
மேடையில் பூத்திருந்தாள்
மணக்கும் அவள் சிவந்த நாக்கில்
ஊஞ்சலாடிக் கிடந்தது தமிழ்
காய்ந்து கூர் தீட்டிய உடைமுள்ளாய்
என் கண்ணை கீறி உள்ளேறியது
இரண்டு மீன்களுக்கு இடையில்
துடைக்கப்பட்டு கிடந்த அவள் நெற்றி
காலப் பெருவெளியில்
ஒளியின் நீளம் கொண்டு
முளைவிட்டு வளர்ந்து கொண்டிருக்கும்
என் பெருவிரல் தீப்பிடித்து எரிந்து
கசிகிறது செந்தூரம்
கடலே காற்றை கைது செய்
---
29.12.2009
No comments:
Post a Comment