Monday, January 4, 2010

கால்வாய் ஒன்று கல்லறையானது

கால்வாய் ஒன்று கல்லறையானது
இரா. அரிகரசுதன்

கேட்பார் அற்று கிடக்கின்றன
வார்த்தைகள்

தவளை இரைதேடியும்
பாம்பு தவளைதேடியும்
பவனிவந்த இரவுகள்
கொசுவலைகளால் போர்த்தி கிடக்கின்றன

இரவுகளை ஒளிரச் செய்த
நீர் கண்ணாடிகள்
குப்பைகளுக்குப் பின்னால்
முகத்தைப் போர்த்திக்கொள்ள

முலை வெட்டுபட்ட
நிலத்தைப் பார்த்து
பயந்துபோன நிலவை
மேகம் நெருங்கி அரவணைக்க
அந்த வானம் அழுதது

கால்வாய் ஒன்று கல்லறையானது
------
02.01.2010

No comments: