காற்று சுவரை சமாதி என்று பொருள் கொள்வதில்லை
இரா. அரிகரசுதன்
நீ சென்றபோது
நான் உயிரோடுதான் இருந்தேன்
இதயத்தை வெட்டி
பிளந்து வைத்தது
போன்ற அந்த
மாதுளைதான் நான்
தீ எரிந்து
கொண்டிருக்காத
அர்த்த இராத்திரியிலும்
விட்டில் பூச்சிகள்
பூக்களைச் சுற்றி
பறப்பதில்லை
-----
02.01.2010
No comments:
Post a Comment