Friday, March 19, 2010

காதல் கொதி

காதல் கொதி
இரா. அரிகரசுதன்


கால்விரல் கொண்டு
கீறி வரைந்த ஓவியத்தை
தந்துவிட்டு
பறந்து சென்ற
என் தவிட்டுக் குருவியே

கிள்ளிவிட்டு கிள்ளிவிட்டு
ஆராத காந்தலாய் கொண்டு
திரியும் என்னிடம்

உன்மேலான கொதி
அப்படியே
கொதித்துக் கிடக்கிறது

துருவப்பரப்பில்
சிரித்து தொங்கும் அந்த நட்சத்திரம்
உருவிப் பாய்ந்து
எரிந்து தீரும்போது

ஒரு குற்றவாளிக்கூண்டில்
“நான் சொல்வதெல்லாம் உண்மை
உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை”
என்று சத்தியம் செய்து கொண்ருக்கும் உன்னை

இரத்தக் கண்கொண்டு
திமிறிப் பார்ப்பாள்
கறுத்த உடல் கொண்ட
காதல் தேவதை..

-----
19.03.2010

1 comment:

போளூர் தயாநிதி said...

ஒரு குற்றவாளிக்கூண்டில்
“நான் சொல்வதெல்லாம் உண்மை
உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை”
என்று சத்தியம் செய்து கொண்ருக்கும் உன்னைnalla aakkampoluran