வண்ணங்களை தொலைத்த ஓவியன்
--------------------------------- இரா. அரிகரசுதன்
தவளைகள் பெடைக்காக
கத்திக்கொண்டிருந்த அந்த
மழைக்கால இரவு தாண்டியபோது
மௌனமாய் நகர்ந்து கொண்டிருந்த
நத்தையை வல்லூறு ஒன்று
கொத்திச் சென்றது
யாருமற்ற தூரத்தில் பூத்திருந்த
அந்த வானவில்லை தேடிப்பிடித்து
வெறுமைகள் பழுத்துக்கிடந்த
என் தோட்டத்தில் நட்டு வைத்தேன்
ஆயிரம் வருடத்து ஆல மரம் போன்று
கிளை விட்டு படர்ந்து நின்ற அதில்
நனைந்த தம் சிறகுகளை
உலர்த்திக் கொண்ட பறவைகள்
சுற்றி சிறகடித்து எச்சமிட்டு
பறக்கையில்
என் வானவில்லை காணவில்லை
--------------------
No comments:
Post a Comment