Wednesday, September 19, 2007

மூடநம்பிக்கையின் முடைநாற்றம்


மூடநம்பிக்கையின் முடைநாற்றம்

இரா. அரிகரசுதன்



சமீபத்தில் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. இப்படி ஒரு தகவல் எல்லோருக்கும் மின்னஞ்சல் மூலமாகப் பரவிவருகின்றது என்று சொல்லி சென்னை நண்பர் ஒருவர் அவருக்கு வந்த மின்னஞ்சலை எனக்கு அனுப்பி வைத்தார்.

அந்த மின்னஞ்சலில் இருந்த படம்தான் இது. ஏற்கனவே மிகப்பெரிய சர்ச்சையைக் ஏற்படுத்திவிட்டு அமைதியான விடயம்தான் இது. படத்தைப் பார்த்த உடனடியாகவே உங்களுக்குப் புரிந்திருக்கும்.

ஆவியும் மனிதனும். புகைப்படம் எடுக்கும்போது ஆவியும் சேர்ந்துபதிவாகியிருக்கின்றது என்று இணையத்தின் மூலமாக மிகப்பெரியத் தொகையை இந்தப் புகைப்படத்திற்கு விலையாககூட நிர்ணயம் செய்தார்கள். என்னச் செய்வது கணினியின் உதவியால் புகைப்படத்தில் செய்தவித்தைதான் இது என்று நிரூபித்தப்பின்னரே மக்கள் அமைதியானார்கள்.

இப்படியாக குழப்பங்கள் அனைத்தும் நடந்து முடிந்து ஓய்ந்தபின்னும் மீண்டும் தன் பயணத்தை ஆரம்பித்திருக்கிறது இந்தப் புகைப்படம்.
புகைப்படத்துடன் வந்தச் செய்தியில் என்ன எழுதியிருக்கிறது தெரியுமா?
இப்படம் உண்மையில்லை என்று அனைவரும் சொல்கிறார்கள். எது எப்படியோ ஒரு கப்பல்படை வீரர் இப்படத்தை 13 நபர்களுக்கு அனுப்பினார். இரண்டு நாளில் அவர் பதவி உயர்வு பெற்றார். ஒரு தொழில் நிபுணர் இதை நம்பாமல் அவருக்கு வந்தக் மின்னஞ்சலை ஒதுக்கி தள்ளினார். அவர் தொழிலில் மிகப்பெரிய நட்டத்தைச் சந்தித்து அனைத்தையும் இழந்தார். ஒரு தொழிலாளி இதை 13 பேருக்கு அ,னுப்பினார். அவருடைய அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்தது மட்டும் அல்லாமல் 13 நாட்களில் பதவி உயர்வும் அடைந்தார். நான் இப்போது 13 நபர்களுக்கு அனுப்பியுள்ளேன். நீங்களும் அனுப்புங்கள். நல்லது நடக்கும். தவறாமல் அனுப்புங்கள். இத்தகவலைக் கண்டு பயந்துபோயே அனைவரும் பதின்மூன்று பதின்மூன்று பேருக்கு அனுப்பி தள்ளியிருக்கிறார்கள். கிட்டதட்ட எனக்கு வந்த மின்னஞ்சல் 200வதாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆர்வக்கோளாறில் ஒருவர் நல்லது நிறைய நடக்கும் என்ற நப்பாசையில், அனுப்பு அனுப்பு என்று 200 பேருக்கு அனுப்பியிருக்கிறார்.


இப்படி மூடநம்பிக்கையை அறிவியல் கண்டுபிடிப்பான கணினியின் உதவியால் பரப்பிக் கொண்டிருக்கும் இவர்களை என்னச் செய்வது. பெரியார் கைதடி கொண்டு வாங்கு வாங்கென்று வாங்க வேண்டியதுதான்.


என்ன படித்தும் இவர்களின் மூடநம்பிக்கைகள் முடிவுக்கு வராமலிருப்பது வேதனையே.


நம் கல்வி அப்படியிருக்கிறது. கல்வியை சீர்திருத்தம் செய்யாமல் ஒரு மண்ணும் செய்யமுடியாது என்பது நிதர்சனமே.


அக்டோபர் 2006

No comments: