Wednesday, July 22, 2009

இருட்டு

இருட்டு
- மலையன்


அவள்
கனவுகளுக்கு
கள் ஊற்றிக்கொண்டு
உலகெங்கும் தன்
மெல்லியதொடுதலோடு
மதர்த்து திரிகிறாள்...

கலைந்துபோன கனவுகளின்
சுமையில் களைத்துப்போன
இதயங்களை
ஒரு பனிக்கட்டிக் கத்தியின்
கூரிய முனை கொண்டு
இரக்கமற்று பிளந்து செல்கிறாள்...

ஒரு வண்ணத்துப்பூச்சியின்
வயிற்றிலிருந்து வெடித்து
பறக்கும்
பல வண்ணங்களைப் போல
கவிதையை காதலித்துக் கிடப்பவர்களின்
கருவாக உறவு கொள்கிறாள்...

காற்றோடு கலந்துபோன
தொப்புள்கொடிகளின்
இரத்தவாடையில்
என்னோடு பறையாடிக்கொண்டே
அவள் சிரிக்கிறாள்...

பறையொலி கிளர்ந்து
எழுகிறது எங்குமாய்
சிரித்துக்கொண்டேயிருக்கிறாள்

சிந்துகிறது தீ
விரவி பரவி
தீண்டுகிறது தீ

தளிர் துளிர் இலை பூ பிஞ்சு
காய் கனி தழை என
எங்கும் தீ தீ
பெருந்தீ....

----------------------
16.07.2009

1 comment:

arulmurugu said...

irutu pennai alagai prasavittirukirigal


alazgana katrpanai...