Thursday, July 23, 2009

பூச்சாண்டி

பூச்சாண்டி
- மலையன்

வாகனங்களின்
இரைச்சல்களும் புகையும்
நெருக்கியடித்த மாலைப் பொழுது

மரங்கள் என்று
நின்றிருந்தவை நான்கு

பணம்தடவியத் தோல்களுடன்
குழந்தைகள்
ஏணிச்சறுக்கில்...

கால்தட்டியதால்
அழுத குழந்தையின்
அழுகை தடுக்க

மெழுகு பூசி
ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த
ஆப்பிள் ஒன்று எழுந்து வந்தது

"அதோ அந்த
தாடிவைச்ச ஆள்ட்ட
பிடிச்சு கொடுத்துருவேன்"
மிரட்டியது ஆப்பிள்

பயந்துபோன குழந்தை
என்னைப் பார்த்து
கொண்டேயிருந்தது

நான்
கவிதை எழுதிக் கொண்டிருந்தேன்...

----------------------
23.07.2009

1 comment:

RAJI said...

கால் தட்டியும்
குழந்தைகள்
அழுவதில்லை
இப்பொழுது ,
கவிதை பாடிய
புன்னகை பூச்சாண்டிக்காக !

இமயத்திற்கு
ஏதடா
இறப்பு ?
இனிதே வாழ்வாய் நீ
இன்னும் நூறு ஆண்டுகள் .