Friday, October 16, 2009

பீ வண்டி

பீ வண்டி
இரா. அரிகரசுதன்

எங்க நாட்டுல
ஒரு வண்டி உண்டு

இரைச்சலோடு அது ஓடும் போது
பிரமிப்பாக இருக்கும்

அலுங்காம போக
குளு குளு ஏசி
செல் சார்ஜர்
ஏழைகளின் ரதம்
மகாராஜா வண்டி
எல்லா வசதிகளும் உண்டு
தண்டவாளங்கள் நாறி கிடக்கும்

கிழிந்து தொங்கும்
சனநாயகதின் இடைவெளியில்
கையாலும் ஆப்பையாலும்
சுத்தப்படுத்திக் கொண்டே இருப்போம்

புகையோடு பீயையும்
வெளிதள்ளுவதால்
பீ வண்டிண்ணு பெயர் வைத்த
என் மகனுக்கு ஒரு சந்தேகம்

‘மகாராஜா வண்டில பேண்டா
பீ தங்கமாட்டு விழுமா?’

என் மகள் சொன்னாள்
எல்லா கக்கூஸ்களயும் சேத்து
ஒரு தொட்டி ரொம்ப ஈசியா வைச்சிரலாம்
ஸ்டேசனுல தண்ணி ஏத்துறதுபோல
இதயும் மாத்தினா போதும்

நான் சொன்னேன்
‘தீவட்டிய தூக்கிகிட்டு
கோட்டைய நோக்கி நாமல்லாம் நடக்கணும் மக்கா’
----
14.10.2009

1 comment:

PRINCENRSAMA said...

அனல் தான் கவிதை....!

புகை வண்டியைக் காட்டிலும்.. நிலைமை மாறும்வரை பீ வண்டி என்று அழைக்கலாம்,...