நிலா பழுத்தது
இரா. அரிகரசுதன்
வெள்ளிக் கம்பிகள்
வீழ்ந்து படர்ந்ததில்
அவிழ்ந்து சிரித்தது
செவ்வாம்பல்
நாணல் கொண்ட
நாணம் கண்டு
துள்ளி மினுங்கியது
கெண்டை
அள்ளி முடிந்த
கூந்தல் நுனியில்
கண்ணைச் சிமிட்டி
நிலவின் துளிகள்
பார்த்துச் சிவந்ததில்
பழுத்துக்கிடந்தது நிலா
----
04.01.2010
No comments:
Post a Comment